மக்களவையில் இன்று பாரதிய ஜனதா அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது என்பதும் இதை 26 கட்சிகள் வழிமொழிந்தன என்ற செய்தியையும் ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின் படி மக்களவையில் பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏற்றுக் கொள்வதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
மணிப்பூர் விவகாரத்தில் பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ் முன்மொழிந்து உள்ள இந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை காங்கிரஸ் கட்சியின் கவுரவ் கோகாய் என்பவர் முன்மொழிந்தார். இதை 26 கட்சிகள் வழிமொழிந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அனைவரிடமும் கலந்து ஆலோசித்துவிட்டு நம்பிக்கை இல்லா தீர்மான தேதியை தீர்மானிப்பதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பாஜக வெற்றி பெறுமா அல்லது எதிர்க்கட்சி கூட்டணி வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.