கிழக்கிந்திய கம்பெனி போல் பாஜக ஒரு வடக்கிந்திய கம்பெனி: கமல்ஹாசன்

Webdunia
செவ்வாய், 3 ஆகஸ்ட் 2021 (15:39 IST)
இந்தியாவை ஆட்சி செய்ய வெளிநாட்டிலிருந்து கிழக்கிந்திய கம்பெனி வந்ததுபோல் தென்னிந்தியாவை ஆட்சி செய்ய வடஇந்திய கம்பெனி ஒன்று வந்திருக்கிறது என்று பாஜகவை கமலஹாசன் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார்
 
தமிழகத்தை இரண்டாக பிரிக்க முயற்சியில் ஈடுபட்டிருக்கும் பாஜக அரசு மீது கடுமையான கண்டனம் தெரிவித்த கமல்ஹாசன் இதனை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார் 
 
ஒரு மாநிலத்தை வளர்க்க நடவடிக்கை எடுத்தால் அதற்கு பாராட்டு தெரிவிக்கலாம் என்றும் ஆனால் வியாபாரத்திற்காக பிரிக்கலாம் என்று முடிவு செய்தால் அது அரசியல் கட்சி அல்ல என்றும் அது கம்பெனிதான் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
கிழக்கிந்திய கம்பெனி போல பாஜக வடக்கு இந்திய கம்பெனியாக செயல்பட்டால் தமிழகத்தில் வேரூன்ற முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்