மேகதாது அணைகட்ட எதிர்ப்பு - திட்டமிட்டபடி போராட்டம்: அண்ணாமலை உறுதி!

செவ்வாய், 3 ஆகஸ்ட் 2021 (13:33 IST)
மேகதாது அணைகட்ட எதிர்ப்பு தெரிவித்து ஆகஸ்ட் 5 ஆம் தேதி திட்டமிட்டபடி தஞ்சாவூரில் போராட்டம் நடத்தப்படும் என அண்ணாமலை உறுதி. 

 
கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட விடாபிடியாக முயன்று வருவது தொடர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு மேகதாது அணைக்கு மறுப்பு தெரிவித்து வரும் நிலையில் கர்நாடக அரசு அணை கட்டுவதில் தீவிரம் காட்டி வருகிறது. 
 
இதனைத்தொடர்ந்து புதிதாக பொறுப்பேற்ற கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் என தெரிவித்தார். அதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மேகதாது அணைகட்ட ஒரு செங்கல்கூட வைக்கமுடியாது என பதிலடிக் கொடுத்தார். 
 
இதனிடையே முன்னதாக மேகதாது அனை விவகாரத்தில் கர்நாடக அரசை கண்டித்து தமிழக பாஜக சார்பில் உண்ணாவிரத போராட்டம் தஞ்சாவூரில் வருகின்ற ஆகஸ்ட் 5 ஆம் தேதி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 
 
இந்நிலையில் இது குறித்து பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட பிரதமர் மோடி நிச்சயம் சம்மதிக்க மாட்டார் . மேகதாது அணைகட்ட எதிர்ப்பு தெரிவித்து ஆகஸ்ட் 5 ஆம் தேதி திட்டமிட்டபடி தஞ்சாவூரில் போராட்டம் நடத்தப்படும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்