முதலமைச்சருக்கு கிறிஸ்துவ நூலை தந்த கலெக்டர்: இந்துமத புத்தகத்தை வழங்கி பாஜக பதிலடி

Webdunia
செவ்வாய், 14 ஜூன் 2022 (08:41 IST)
முதலமைச்சருக்கு கிறிஸ்துவ நூலை தந்த கலெக்டர்: இந்துமத புத்தகத்தை வழங்கி பாஜக பதிலடி
தமிழக முதலமைச்சருக்கு புதுக்கோட்டை கலெக்டர் கவிதா கிறிஸ்தவ நூல் வழங்கியதை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த நிலையில் பதிலடியாக பாஜகவினர் கலெக்டருக்கு அர்த்தமுள்ள இந்து மதம் என்ற புத்தகத்தை வழங்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் வந்தபோது அவருக்கு மாவட்ட ஆட்சியர் கவிதா அறியப்படாத கிறிஸ்தவம் என்ற கிறிஸ்துவப் புத்தகத்தை வழங்கினார்
 
இதுகுறித்து அவர் பெருமையாக தனது முகநூல் பக்கத்திலும் பதிவு செய்திருந்தார். இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அந்த பதிவை அவர் நீக்கம் செய்தார்
 
இந்த நிலையில் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது கலெக்டர் கவிதாவை சந்தித்த பாஜக பொதுச்செயலாளர் முரளி மற்றும் விஜயகுமார் கண்ணதாசன் எழுதிய அர்த்தமுள்ள இந்துமதம் என்ற நூலை கொடுத்து ஆட்சியருக்கு பதிலடி கொடுத்தது கொடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்