கொரோனா தடுப்பூசி நிறுவனத்தில் கொரோனா! – 50 பேர் பாதிப்பு!

Webdunia
புதன், 12 மே 2021 (12:55 IST)
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் கொரோனா தடுப்பூசி நிறுவன பணியாளர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை உச்சமடைந்துள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை தினசரியில் உலகளவில் முதலிடத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கோவாக்சின் தடுப்பூசிகளை தயாரிக்கும் பாரத் பயோடெக் நிறுவனத்தில் பணிபுரியும் 50 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தடுப்பூசி நிறுவனத்தில் பணி புரிபவர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்