காவல்துறையினர்களை விமர்சிக்க வேண்டாம்: வழக்கறிஞர்களுக்கு பார் கவுன்சில் வேண்டுகோள்

Webdunia
வெள்ளி, 27 மார்ச் 2020 (08:59 IST)
காவல்துறையினர்களை விமர்சிக்க வேண்டாம்:
மக்களின் உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் வழக்கறிஞர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், காவல் துறையினரை தேவையில்லாமல் சமூக ஊடகங்களில் எந்த வடிவிலும் விமர்சிப்பதை வழக்கறிஞர்கள் தவிர்க்க வேண்டும் என்றும் வழக்கறிஞர்களுக்கு பார் கவுன்சில் வேண்டுகோள் விடுத்துள்ளது.
 
ஊரடங்கு உத்தரவின்போது வெளியே செல்லும் பொதுமக்களை காவல்துறையினர் அடித்து விரட்டி வரும் நிலையில் ஒருசில வழக்கறிஞர்களும் இதில் சிக்கி, காவல்துறையினர்களை சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். 
 
இந்த நிலையில் காவல்துறையினர்களை இந்த நேரத்தில் விமர்சனம் செய்ய வேண்டாம் என பார் கவுன்சில் வழக்கறிஞர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. கொரோனாவிற்கு எதிராக மனிதகுலமே போராடி வரும் நிலையில் அரசின் அறிவுறுத்தலுக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும், இதில் வழக்கறிஞர்கள் பங்கு அதிகம் இருப்பதாகவும் பார் கவுன்சில் தெரிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்