தமிழகத்தை தாக்க பயங்கரவாதிகள் திட்டம்: திடுக்கிடும் தகவல்

Webdunia
சனி, 27 ஏப்ரல் 2019 (07:29 IST)
இலங்கையில் கடந்த ஞாயிறு அன்று பயங்கரவாதிகளின் தொடர் தாக்குதலால் அந்நாடே நிலைகுலைந்தது. இந்த தொடர் தாக்குதலில் 300க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் தங்கள் உயிரை இழந்தனர். இதில் சுமார் ஐம்பது பேர் வெளிநாட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் 500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
இலங்கையில் பயங்கரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலை அடுத்து இந்தியாவிலும் குறிப்பாக தமிழகம் உள்பட ஒருசில தென்மாநிலங்களிலும் தாக்குதல் நடத்தலாம் என்று கூறப்பட்டதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது
 
இந்த நிலையில் 'தமிழகத்தின் முக்கிய நகரங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தவுள்ளதாகவும் ராமநாதபுரத்தில் 19 பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாகவும் தமிழக போலீசாருக்கு பெங்களூரு போலீசார் கடிதம் எழுதியுள்ளனர். இதுகுறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு தமிழக காவல்துறைக்கு பெங்களூரு காவல்துறை அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த திடுக்கிடும் தகவலால் தமிழக காவல்துறை அதிர்ச்சி அடைந்துள்ளது. பயங்கரவாதிகளின் சதியை முறியடிக்க தமிழக காவல்துறை முக்கிய நகரங்களில் பாதுகாப்பை அதிகரித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்