சென்னையில் பூஜ்யநிழல் நாள் – பொதுமக்கள் வியப்பு !

புதன், 24 ஏப்ரல் 2019 (15:25 IST)
சென்னையில் இன்று நண்பகல் 12.07 மணிக்கு பூஜ்யநிழல் உருவானது. இதனை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

ஒவ்வொரு பொருளின் மீதும் ஒளி படும் போது அதற்கு எதிர்த்திசையில் அப்போருளின் நிழல் உருவாகிறது. உதாரணமாக ஒரு மனிதன் நிற்கும் போது ஒளி அவனுக்குப் பின்னா இருந்து வந்தால் அவனது நிழல் முன்னால் விழும். முன்னால் இருந்து வந்தால் நிழல் பின்னால் விழும். இதுவே ஒளி அவனது தலைக்கு மேல் செங்குத்தாக விழுந்தால் அவனது நிழல் அவனது கால்களுக்கு அடியில் விழும். அதனால் அவனது நிழல் தெரியாது. அதனை பூஜ்ய நிழல் என அறிவியலாளர்கள் அறிவிக்கின்றனர். ஆனால் சில பூகோள அமைப்புகளால் இந்தியாவில் அது போல பூஜ்ய நிழல் உருவாவது இல்லை. ஆனால் ரொம்பவும் அரிதாக அந்த நிகழ்வு இன்று நடந்துள்ளது.

இந்தியாவில் இந்த நிகழ்வு இன்று சென்னை, பெங்களூர் மற்றும் மங்களூர் ஆகிய ஊர்களில் உருவாகியுள்ளது. இதனை வானிலை ஆய்வாளர்கள் கண்டுபிடுத்து கூறியுள்ளனர். அரிதான இந்த பூஜ்ய நிழல் நாளை முன்னிட்டு மானவர்களுக்கு இதைப் பள்ளிகளில் விளக்கம் செய்து காட்டியுள்ளனர். சரியாக நண்பகல் 12.07 மணிக்கு இந்த நிகழ்வு சென்னையில் உணரப்பட்டது. அதன் பின்னர் 10 நிமிடங்களில் பெங்களூருவிலும் பின்னர் மங்களூருவிலும் உணரப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்