பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களுக்கும் அல்லது பெற்றோர்களுக்கும் பாத பூஜை செய்யக்கூடாது என மாவட்ட கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பி இருப்பதை அடுத்து, தனியார் பள்ளி நிர்வாகங்கள் அதிர்ச்சி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள பல தனியார் பள்ளிகளில், பள்ளி தேர்வுக்கு முன்பு மாணவர்கள் பாத பூஜை என்ற பெயரில் சடங்குகள் செய்து வருவது குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்கள் எழுந்து வருகின்றன.
பாத பூஜை தொடர்பான புகார்கள் வந்ததை அடுத்து, தற்போது அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
அந்த சுற்றறிக்கையில், பள்ளிகளில் பொதுத் தேர்வுக்கு முன் பாத பூஜை என்ற பெயரில் நடைபெறும் கொடுமைகளை தவிர்க்க வேண்டும் என்றும், பாத பூஜை தொடர்பான புகார்கள் தனியார் பள்ளிகளின் மேல் வந்தால், சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாவட்ட கல்வி அலுவலரின் இந்த சுற்றறிக்கையால், தனியார் பள்ளி நிர்வாகங்கள் அதிர்ச்சி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.