18 மாதம் குழந்தை ஒன்று கடலைப் பருப்பைத் தின்னும்போது தொண்டையில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் அருகிலுள்ள கிராமத்தில் வசித்துவருபவர் விஜய். இவருக்கு 18 மாதக் கைக்குழந்தை(பெண்) உள்ளது.
இந்நிலையில் கந்த திங்கட்கிழமை அன்று குழந்தை கடலைப் பருப்பு சாப்பிட்டுள்ளது. அப்போதும் திடீரென்று பருப்பு தொண்டையில் சிக்கியுள்ளது. இதனால் குழந்தை மூச்சுவிட சிரமப்பட்டுள்ளது. இதைப் பார்த்த பெற்றோர் குழந்தையை திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மருத்துவமனையில் கொண்டு சேர்ந்தனர். அங்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில் குழந்தை இன்று சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.