புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், அரசு மருத்துவமனைகளில் கட்டண பிரிவுகள் தொடங்கப்படுவதற்கான காரணத்தை விளக்கியுள்ளார். அனைத்து மக்களுக்கும் மருத்துவ சேவைகள் கிடைக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என அவர் தெரிவித்துள்ளார்.
மருந்துகள், சிகிச்சை ஆகியவை எல்லோருக்கும் ஒன்றாகவே இருக்கும்; ஆனால் தனிமையான முறையில் அறையில் சிகிச்சை பெற விரும்புவோருக்கே கட்டணம் வசூலிக்கப்படும். இது பொதுவார்டுகளைத் தவிர தனிப்பட்ட வசதிகளை விரும்புவோருக்கான ஏற்பாடாகும்.