தூக்கத்திலேயே உயிரிழந்த 20 பேர்: பஸ் விபத்தில் தப்பியவர் பேட்டி

Webdunia
வியாழன், 20 பிப்ரவரி 2020 (11:35 IST)
தூக்கத்திலேயே உயிரிழந்த 20 பேர்:
கேரள மாநிலத்தின் அரசு பேருந்து ஒன்று இன்று அதிகாலை அவிநாசி அருகே கண்டெய்னர் லாரியுடன் பயங்கரமாக மோதிய விபத்தில் 20 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். மொத்தம் 48 பேர் அந்த பேருந்தில் பயணம் செய்த நிலையில் அதில் 20 பேர் பலியாகி உள்ளனர் என்றும் 20 பேருக்கு மேல் காயம் அடைந்து உயிருக்கு போராடி வருவதாகவும் ஒரு சிலர் மட்டுமே காயம் இன்றி உயிர் தப்பியதாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் இந்த விபத்தில் காயமின்றி உயிர் தப்பிய ஒருவர் பேட்டி அளித்தபோது அதிகாலையில் பேருந்தில் இருந்த அனைவரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்ததாகவும் இதில் பலியான யாருக்கும் விபத்து நடந்ததே தெரியாமல் தூக்கத்திலேயே உயிரிழந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார் 
 
மேலும் கண்டெய்னர் லாரி டிரைவர் தூங்கியதால்தான் இந்த விபத்தில் நேர்ந்ததாகவும், கண்டெய்னர் லாரி தடம்புரண்டு நூறு அடிக்கு மேல் கட்டுப்பாட்டை மீறி சாலையில் சென்று எதிரே வந்த பேருந்தில் பயங்கரமாக மோதியது என்றும், இதில் பேருந்தின் முன்புறம் முற்றிலுமாக சேதமடைந்து முன்புறம் உட்கார்ந்து இருந்த அனைவருமே பலியாகி விட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. அதிகாலையில் நடந்த இந்த கோர விபத்து காரணமாக அவினாசி சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்