கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!

Webdunia
செவ்வாய், 8 ஆகஸ்ட் 2023 (07:23 IST)
உள்ளூர் விசேஷங்கள் மற்றும் திருவிழாவின் போது ஒரு சில மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அளிப்பது வழக்கமான ஒன்றுதான் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் வரும் 16ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார் 
 
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆடி அமாவாசை மற்றும் குழித்துறை வாவுபலி கொண்டாட்டம் நடைபெற உள்ளது. இந்த கொண்டாட்டத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 
 
ஆனால் அதே நேரத்தில் இந்த விடுமுறையை ஈடுகட்ட செப்டம்பர் ஒன்பதாம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக இருக்கும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 
 
இந்த அறிவிப்பை அடுத்து கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆகஸ்ட் 16ஆம் தேதி பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்