ஆகஸ்ட் 9ம் தேதி உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!
வியாழன், 3 ஆகஸ்ட் 2023 (15:29 IST)
ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி உள்ளூர் விடுமுறை என திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவித்துள்ளார்.
ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி ஆடி கிருத்திகை விழா கொண்டாட இருப்பதை அடுத்து அன்றைய தேதியில் திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
எனவே அன்றைய தினம் பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் ஆகஸ்டு 9ஆம் தேதி விடுமுறையை ஈடு செய்ய ஆகஸ்டு 26ஆம் தேதி வேலை நாளாக கருதப்படும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.