அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்தது அமலாக்கத்துறை.. உண்மைகள் வெளிவருமா?

Webdunia
திங்கள், 7 ஆகஸ்ட் 2023 (21:55 IST)
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுக்க சுப்ரீம் கோர்ட் மற்றும் சென்னை முதன்மை நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து சற்றுமுன் அவர் காவலில் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
புழல் சிறையில் இருந்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனுக்கு செந்தில் பாலாஜி அழைத்துவரப்பட்டதாக கூறப்படுகிறது.  சி.ஆர்.பி,எஃப் போலீஸ் பாதுகாப்புடன் சிறையில் இருந்து செந்தில் பாலாஜியை  அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். 
 
அமலாக்கத்துறை அலுவலகத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.  தொடர்ச்சியாக 5 நாட்கள் அவரை காவலில் எடுக்க நீதிமன்றம் அனுமதித்துள்ளதை அடுத்து இந்த ஐந்து நாட்களில் அவரிடமிருந்து என்னென்ன உண்மைகள் வெளிவரும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் மூன்று புள்ளி
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்