அதிமுக மற்றும் அமமுக வேட்பாளர்கள் மீது தாக்குதல் !!!

Webdunia
புதன், 5 மே 2021 (23:31 IST)
கரூர் பக்கம்  அதிமுக வேட்பாளர் மற்றும் அமமுக வேட்பாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதோடு ஹோட்டலை சூறையாடியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பாரா ? தமிழக முதல்வர்
 
 
கரூர் மாவட்ட அளவில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதியிலும், கரூர், கிருஷ்ணராயபுரம் (தனி), குளித்தலை, அரவக்குறிச்சி ஆகிய 4 தொகுதிகளையும் திமுக கைப்பற்றியது, காரணம் இங்குள்ள தமிழக போக்குவரத்து துறை அமைச்சரும், கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதுள்ள அதிர்ப்தி தான் ஒட்டுமொத்த காரணம், இதுமட்டுமில்லாமல், அமைச்சரின் உறவினர்களிடம் மட்டுமே பணப்பட்டுவாடாவை கொடுத்ததாலும் மற்றவர்களை யாரையும் நம்பாமல் இருந்த்தால் வந்த வினையே இதுமட்டுமில்லாமல், சட்டசபை தேர்தலை பஞ்சாயத்து தேர்தல் போல, எளிதில் வெற்றி பெற்று விடலாம் என்றெல்லாம், ஆணவத்தின் உச்சத்தில் இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு, அவர் கொடுத்த சேலைகளையும், இலவசமாக, ஜெயலலிதா பிறந்த நாள் அன்று கொடுத்த சில்வர் தட்டுகளையெல்லாம் தேர்தல் பிரச்சாரத்தின் போது சொன்னதனால் வந்த விளையும், சுமார் 200 பெண்கள் ஒன்று சேர்ந்த இட்த்தில் அந்த அம்மா கட்டியிருக்கும் சேலை நான் கொடுத்த்து என்றெல்லாம் கூறியதால் பெண்களே எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகின்றது. அதுமட்டுமில்லாமல், கூட்டணி கட்சி நிர்வாகிகளை கூண்டோடு கழட்டி விட்டதும் மிகப்பெரிய காரணம் என்றும், இவரது ஆட்சி காலத்தில் சிறைசென்றவர்கள் ஒரு டீம் ஆக செயல்பட்டு தான் சதி செய்துள்ளது தெரியவந்துள்ளது. இந்நிலையில், நடந்து முடிந்த வாக்கு எண்ணிக்கையின் போது, அதிக வாக்கு வித்யாசத்தில் வெற்றி பெற்ற கரூர் மாவட்டத்தின் நான்கு சட்டமன்ற தொகுதிகளையும் திமுக வெற்றி பெற்றுள்ளது., இங்குள்ள சமூக நல ஆர்வலர்கள்., இதுமட்டுமில்லாமல், வாக்கு எண்ணிக்கையின் போது 16 வது சுற்றிலேயே அப்போதைய அமைச்சரும், கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் வெளியேறினார். ஆனால் அவரை தொடர்ந்து, அம்முக வேட்பாளர், கிருஷ்ணராயபுரம் அதிமுக வேட்பாளர் முத்துக்குமார் என்கின்ற தானேஷ் ஆகியோரது வாகன்ங்களையும் அடுத்தடுத்து திமுக வினர் முற்றுகையிட்டு கற்களால் தாக்கி சேதப்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், வேட்பாளர்களையும் தாக்கியதாகவும், கூறப்படுகின்றது மேலும், வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருக்கும் போது கரூர் மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கே.என்.ஆர்.சிவராஜ் என்பவருடைய ஹோட்டலையும் அடித்து நொறுக்கியுள்ளனர்.  இது போன்ற வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை மற்றும் கட்சி ரீதியாக நடவடிக்கையினை மு.க,.ஸ்டாலின் எடுக்க வேண்டுமென பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்