வால்பாறை தொகுதி முடிவு அறிவிக்கப்பட்டது… அதிமுக வேட்பாளர் வெற்றி!

ஞாயிறு, 2 மே 2021 (15:49 IST)
வால்பாறை தொகுதியில் அமுல் கந்தசாமி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

தமிழக தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் குறைந்த வாக்குகள் கொண்ட தொகுதிகள் சிலவற்றின் எண்ணிக்கை முடிந்து முடிவுகளே அறிவிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் வால்பாறை தொகுதியில் அதிமுக வேட்பாளர் அமுல் கந்தசாமி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவர் 66,474 வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆறுமுகம், 53,309 வாக்குகளும் பெற்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்