சென்னையில் விநாயகர் சிலைகளை கரைக்க ஏற்பாடு.. பாதுகாப்பு பணியில் 200 போலீசார்..!

Siva
ஞாயிறு, 15 செப்டம்பர் 2024 (07:37 IST)
சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் விநாயகர் சிலைகளை கரைக்க ஏற்பாடுகள் தயார் என செய்தி வெளியாகியுள்ளது.

7 அடி உயரம் வரை உள்ள சிலைகள் மற்றும் 7 அடி உயரத்திற்கு மேல் உள்ள சிலைகளை கரைக்க 2 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. மேலும்  உயர் கோபுர கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு அறை அமைப்பு. சுமார் 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

மேலும் சிலையை கரைக்க வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க, வாகன நிறுத்தமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 100க்கும் மேற்பட்ட மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட உள்ளனர்.

சென்னை மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்கள் அனைத்திலும் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு காவல்துறையினர் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும் விநாயகர் சிலை கரைக்கும் நிகழ்வில் எந்த விதமான அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க முன்னேற்றத்திற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

பொதுமக்கள்   மற்றும் பக்தர்கள் வழிபாட்டு விதிமுறைகளை கடைப்பிடித்து விநாயகர் சிலையை கரைக்குமாறு கோரிக்கை விடப்பட்டுள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்