அரசு நலத்திட்டங்கள் சரிவர கிடைக்கிறதா.? பயனாளிகளுடன் ஸ்டாலின் கலந்துரையாடல்..!

Senthil Velan

வியாழன், 4 ஜூலை 2024 (16:31 IST)
அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் பயன் பெற்று வரும் பயனாளிகளுடன் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வீடியோ கால் மூலம் கலந்துரையாடினார்.

முதல்வரின் முகவரி துறையின் “நீங்கள் நலமா” என்ற திட்டத்தில் பயனாளிகளை நேரடியாக வீடியோ கால் வாயிலாக தொடர்பு கொண்டு அவர்களின் கருத்துகள் மற்றும் அரசு நலத்திட்டங்கள் குறித்து தலைமைச் செயலகத்தில் இருந்து முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டறிந்தார்.
 
அப்போது கலைஞர் உரிமைத் தொகை முறையாக வந்து சேருகிறதா என பயனாளியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டார். இதற்கு பதில் அளித்த பயனாளி, “கலைஞர் உரிமைத் தொகை முறையாக வந்து சேருகிறது, மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்று தெரிவித்தார். மேலும் அரசின் உதவித் தொகை உரிய நேரத்தில் வருவதாக முதலமைச்சரிடம் பயனாளிகள் நன்றி தெரிவித்தனர்.

ALSO READ: பிரதமர் மோடியுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு..! ஆந்திராவுக்கு வரிச்சலுகை வழங்க கோரிக்கை..!!

மகளிர் விடியல் பயணம், புதுமைப் பெண், முதலமைச்சரின் காலை உணவு, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம், ஒலிம்பிக் தேடல், நான் முதல்வன், ‘நம்மை காக்கும் 48, உங்கள் தொகுதியில் முதலமைச்சர், முதல்வரின் முகவரி, கள ஆய்வில் முதலமைச்சர் போன்ற அரசின் திட்டங்கள் குறித்தும் பயனாளிகளிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்