ஓமன் நாட்டில் சிக்கி தவிக்கும் தமிழக மீனவர்கள்: மத்திய அமைச்சருக்கு அண்ணாமலை கடிதம்

Webdunia
வியாழன், 4 ஆகஸ்ட் 2022 (20:06 IST)
ஓமன் நாட்டில் சிக்கி தவிக்கும் தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார் 
 
ஓமன் நாட்டில் சிக்கி தவிக்கும் 8 தமிழக மீனவர்களை மீட்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் 4 மாதங்களுக்கு முன்பு ஓமன் சென்ற குமரி மீனவர்களுக்கு ஊதியமும் வழங்கப்படவில்லை என்றும் நாடு திரும்ப வேண்டுமானால் அவர்கள் தலா 1.1  லட்சம் வழங்க கோரி உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதி உள்ளார் 
 
இதனை அடுத்து மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்