தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தினசரி ஊடகங்களில் தலைப்பு செய்திகளில் இடம் பெற்று வருகிறார் என்பதும் குறிப்பாக நேற்றைய செய்தியாளர் சந்திப்பின்போது அவர் செய்தியாளர்களிடம் செய்த வாக்குவாதம் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் இன்று காலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சாமி தரிசனம் செய்துள்ளார். நேற்று திருப்பதியில் இருந்து திருமலைக்கு பாத யாத்திரையாக நடந்து சென்ற அவர் நேற்றிரவு மலையில் தங்கியதாகவும் அதன் பின்னர் இன்று காலை அவர் விஐபி பிரேக் தரிசனம் மூலம் செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ள
இந்த நிலையில் அண்ணாமலைக்கு தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டதாகவும் வேத பண்டிதர்கள் அவருக்கு ஆசி வழங்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன