இந்நிலையில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொள்ள வந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசிக்கொண்டிருக்கும் போது பொதுமக்களில் ஒருவர் பெட்ரோல் விலையை எப்போது குறைப்பீர்கள் என்ற கேள்வியைக் கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த அண்ணாமலை பெட்ரோல் விலையை 35 ரூபாய்க்கு குறைக்க கூட தயாராக இருப்பதாக பேசினார். ஆனால் பொதுமக்கள் தொடர்ந்து கேள்விகளை எழுப்பியதால் பாதியிலேயே கூட்டத்தை முடித்துக்கொண்டு சென்றுவிட்டாராம்.