இது குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் தற்போது கையிருப்பில் 24,98,365 தடுப்பூசிகள் இருக்கிறது. இதனால் ஞாயிற்றுக்கிழமை 3 ஆம் தேதியன்று தமிழகம் முழுவதும் 20 ஆயிரம் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகிறது. மூன்று மருத்துவ முகாம்களைப் போலவே இந்த நான்காவது மருத்துவ முகாமும் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 7 மணிவரை நடைபெற உள்ளது.