இன்னும் 140 நாட்களில் திமுக ஆட்சி முடிந்துவிடும்: நயினார் நாகேந்திரன்

Mahendran

சனி, 1 நவம்பர் 2025 (16:23 IST)
தஞ்சாவூர் பெரிய கோயிலை கட்டிய மாமன்னர் ராஜராஜ சோழனின் 1040-வது சதய விழாவை முன்னிட்டு, பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அவரது சிலைக்கு மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, அவர் தமிழக அரசை கடுமையாகச் சாடினார்.
 
ராஜராஜ சோழன் திறமையான ஆட்சி செய்தவர் என்று புகழ்ந்தார். ராஜேந்திர சோழனின் 1000-வது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றுச் சோழர்களின் புகழைப் பரப்பியதைச் சுட்டிக்காட்டினார். தஞ்சை பெரிய கோவில் வெளியே உள்ள ராஜராஜ சோழன் சிலையை உள்ளே வைப்பது குறித்து மத்திய அரசுக்குப் பரிந்துரைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
 
நெல் கொள்முதல் நிலையங்களில் தாமதம் காரணமாக நெல் மூட்டைகள் தேங்கி, முளைத்து கெட்டு வீணாவதாகவும், விவசாயிகள் போராடி வருவதாகவும் குற்றம் சாட்டினார்.  இவ்வளவு பிரச்சினைகள் இருந்தும் முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் சினிமா பார்த்து வருவதாக கடுமையாக விமர்சித்தார்.
 
"தி.மு.க. ஆட்சி முடிய இன்னும் 140 நாட்களே உள்ளன. கவுண்டவுன் தொடங்கிவிட்டது" என்று நயினார் நாகேந்திரன் எச்சரித்தார். வரும் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்