ரூ.100ஐ எட்டிய பெட்ரோல் விலை: மக்கள் அப்செட்!

சனி, 2 அக்டோபர் 2021 (07:51 IST)
தொடர் விலையேற்றத்தின் காரணமாக தமிழகத்தில் பெட்ரோல் விலை மீண்டும் ரூ.100ஐ எட்டியுள்ளது. 
 
பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த சில வாரங்களாக உயராமல் ஒரே விலையில் இருந்த நிலையில் நேற்று திடீரென பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்தது பொதுமக்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. 
 
இந்த நிலையில் இன்று மூன்றாவது நாளாகவும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அத்னபடி இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.99.80 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.95.02-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை ரூ.100ஐ நெருங்கி வருவதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்