மத்திய அரசு இந்தியைத் திணிப்பதாகவும், கன்னடம் உள்ளிட்ட பிற மொழிகளை புறக்கணிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இந்தி மற்றும் சமஸ்கிருதத்திற்கு தாராளமாக நிதி ஒதுக்கப்படும்போது, செம்மொழியான கன்னடத்தின் வளர்ச்சிக்கு நிதி மறுக்கப்படுவது அநீதி என்றார்.
கல்வித்துறையில் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆதிக்கம் செலுத்துவது, கர்நாடக குழந்தைகளின் இயற்கை திறனையும் படைப்பாற்றலையும் பலவீனப்படுத்துகிறது. வளர்ந்த நாடுகளில் தாய்மொழி கல்விக்கு உள்ள முக்கியத்துவம் இங்கு இல்லை என்றும் கவலை தெரிவித்தார்.
கர்நாடகா மத்திய அரசுக்கு ரூ.4.5 லட்சம் கோடி வருவாய் ஈட்டி தந்தாலும், அதற்குரிய நியாயமான வளங்கள் மறுக்கப்படுகின்றன. இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்றும், கர்நாடகாவை மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவதாகவும் அவர் சாடினார்.