மணமகளின் அப்பாவுடன் ஓடிப்போன மணமகனின் தாய்.. காதலிப்பதாக காவல் நிலையத்தில் வாக்குமூலம்..!

Mahendran

சனி, 1 நவம்பர் 2025 (15:30 IST)
மத்தியப் பிரதேசம் உஜ்ஜைன் மாவட்டத்தில், தன் மகனுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட மணமகளின் தந்தையுடன் 45 வயது மதிக்கத்தக்க திருமணமான பெண் ஒருவர் ஓடிப்போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
உன்ட்வாஸ் கிராமத்தை சேர்ந்த 45 வயதுப் பெண்ணின் மகனுக்கும், 50 வயதுடைய நபரின் மகளுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. நிச்சயதார்த்தத்துக்கு முன்பே, மணமகனின் தாய்க்கும், மணமகளின் தந்தைக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளது. அப்பெண் ஒரு வாரம் காணாமல் போகவே, குடும்பத்தினர் போலீஸில் புகார் அளித்தனர்.
 
விசாரணையில், அப்பெண் தனது மகனுக்கு சம்பந்தி ஆகவிருந்தவருடன் விருப்பப்பட்டு ஓடிப்போனது தெரியவந்தது. காவல் நிலையத்தில் ஆஜரான இருவரும், தாங்கள் காதலிப்பதாகவும், ஒன்றாக வாழ விரும்புவதாகவும் தெரிவித்தனர்.
 
இருவரும் வயது வந்தவர்கள் என்பதால், இது தனிப்பட்ட விவகாரம் எனக் கருதி போலீஸார் எந்த வழக்கும் பதியவில்லை. இந்த சம்பவம் உள்ளூர் மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்