2.35 கோடியாக அதிகரித்த கொரோனா பாதிப்பு - உலக நிலவரம்

சனி, 2 அக்டோபர் 2021 (07:40 IST)
உலகம் முழுவதும் இதுவரை 235,039,587 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2.35 கோடியாக அதிகரித்துள்ளது. 
 
இந்நிலையில் உலகம் முழுவதும் இதுவரை 235,039,587 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 4,805,092 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 211,790,563 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 18,443,932 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
இவர்களில் 18,355,384 பேர் லேசான தொற்று அறிகுறிகளுடனும், 88,548  பேர் கவலைக்கிடமான நிலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்