தமிழகத்தில் மூன்று முதலமைச்சர்கள் உள்ளனர்: பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம்!

Webdunia
புதன், 21 ஜூலை 2021 (07:15 IST)
தமிழகத்தில் 3 முதலமைச்சர்கள் உள்ளனர் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
தமிழக பாஜக தலைவராக இருந்த எல் முருகன் அவர்கள் மத்திய இணை அமைச்சராக சமீபத்தில் பொறுப்பேற்ற நிலையில் தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை தேர்வு செய்யப்பட்டார். இதனை அடுத்து அவர் பல ஊடகங்களுக்கு தொடர்ச்சியாக பேட்டி அளித்து வருகிறார் என்பதும் அதுமட்டுமின்றி ஒவ்வொரு நகரத்திற்கும் சென்று தொண்டர்களை நேரில் சந்தித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் 3 முதலமைச்சர்கள் உள்ளனர் என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் முதலமைச்சராக ஸ்டாலின் இருந்து வந்தபோதிலும் இரண்டாவது முதலமைச்சராக உதயநிதியும் மூன்றாவது முதலமைச்சராக ஸ்டாலின் மருமகன் சபரீசன் ஆகியோர் உள்ளனர் என்று அவர் விமர்சனம் செய்தார் அவருடைய இந்த விமர்சனம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
அண்ணாமலையின் இந்த விமர்சனத்திற்கு திமுகவினர் என்ன பதிலடி கொடுக்க போகின்றனர் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்