47 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்து!

செவ்வாய், 20 ஜூலை 2021 (08:20 IST)
47 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று கையெழுத்து ஆக உள்ளது. 

 
கடந்த ஏப்ரல் மாதம் தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று கடந்த மே மாதம் ஓட்டுகள் எண்ணப்பட்டன. இதில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. தற்போது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது.
 
இந்நிலையில், தமிழகத்தில் 82,400 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில் 47 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாக உள்ளது. Capital Lamd, Adani, JSW உள்ளிட்ட பிரபல நிறுவனங்கள் தமிழக அரசுடன் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ள உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்