உதயநிதி படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர். ரஹ்மான் !

செவ்வாய், 20 ஜூலை 2021 (22:31 IST)
இந்தியில் வெளியாகிப் பெரும் வெற்றி பெற்ற படம் ஆர்டிக்கிள் 15. இப்படம் தமிழில் ரீமேக் ஆகிறது. இப்படத்தின் முக்கிய அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

கனா என்ற படத்தை இயக்கிய அருண்ராஜா காமராஜா இயக்கத்தில் ஆர்டிகிள்15 என்ற ரீமேக் படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கவுள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இப்படத்தை போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து வழங்க, ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிகவுள்ளதாக இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஆர்டிகிள் 15 ரீமேக் படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

இதுகுறித்த அதிகார்ப்பூர்வ அறிவிப்பு விரைவில் படக்குழு அறிவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உதயநிதி ஸ்டாலின் தற்போது மு., மாறனுடன் கண்ணை நம்பாதே, மகிழ்திருமேனியின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்