ஜெயலலிதாவுக்கு இதய துடிப்பில் முடக்கம் - தொடர்ந்து ஆஞ்சியோ சிகிச்சை

Webdunia
திங்கள், 5 டிசம்பர் 2016 (05:57 IST)
கடந்த செப்டம்பர் 22ம் தேதி முதல் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அனுமதிக்கப்பட்டு இருந்தார். இதனையடுத்து, கடந்த 19ஆம் தேதி தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து அன்று சிறப்பு பொதுப்பிரிவு வார்டுக்கு மாற்றப்பட்டார்.


 

இதற்கிடையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென அவசர சிகிச்சை பிரவில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுவதாக அப்பல்லோ மருத்துவமனை சார்பில் ஒரு அறிக்கை வெளியிட்டது. அவர் மருத்துவ குழுவினரின் தீவிர கண்காணிப்பில் இருந்தார்.

இந்நிலையில், நேற்று இரவு முதல் இன்று அதிகாலை 4 மணி வரை மருத்துவ கண்காணிப்பில் இருந்த அவர், அதிகாலை 4 மணி அளவில் அப்பல்லோ மருத்துவமனையின் மூத்த மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் அவருக்கு ஆஞ்ஜியோ சிகிச்சை செய்தனர்.

இதயத்திற்கு செல்லும் ரத்த நாளத்தில் ஏற்பட்ட அடைப்பை சரி செய்வதற்காக ஆஞ்ஜியோ சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் தொடர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
அடுத்த கட்டுரையில்