பாஜக ஆளும் மாநிலத்தில் 3வது மொழியாக தமிழ் வருமா? அன்புமணி!

Webdunia
சனி, 16 ஏப்ரல் 2022 (09:01 IST)
பாஜக ஆளும் உத்தரபிரதேசத்தில் இந்தி, ஆங்கிலம் தவிர 3வது மொழியாக தமிழை கொண்டு வர முடியுமா என அன்புமணி கேள்வி. 

 
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாமக பொதுக்குழு கூட்டம் அங்குள்ள அண்ணா அரங்கில் நடந்தது. இதில், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி கலந்து கொண்டார். அப்போது அவர் தொண்டர்கள் மத்தியில் பேசியதாவது,
 
பாமக பொறுப்பாளர்கள் நேர்மையாக இருக்க வேண்டும். பணம் சம்பாதிக்கும் நோக்கம் இருப்பவர்கள் ஒதுங்கிக்கொள்ளுங்கள். யார் மீதாவது புகார் வந்தால், அவர்கள் கட்சி பொறுப்பு மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள். 10.5% இடஒதுக்கீடு கண்டிப்பாக கிடைக்கும். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  நிறைவேற்றுவார். 
 
தமிழகத்தில் மத்திய அரசின் இந்தி திணிப்பு கண்டனத்துக்குரியது. பாஜக ஆளும் உத்தரபிரதேசத்தில் இந்தி, ஆங்கிலம் தவிர 3வது மொழியாக தமிழை கொண்டு வர முடியுமா? நாட்டில் இரு மொழி கொள்கை மட்டுமே சாத்தியமாகும். 3வது மொழி சாத்தியமில்லை என்றார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்