தமிழ் சினிமா தரம் குறைந்ததற்கு விஜய், அஜித் தான் காரணம்: பிரபல நடிகர்!

சனி, 16 ஏப்ரல் 2022 (08:41 IST)
தமிழ் சினிமா தரம் குறைந்ததற்கு விஜய், அஜித் தான் காரணம்: பிரபல நடிகர்!
தமிழ் சினிமா தரம் குறைந்ததற்கு விஜய், அஜித் தான் காரணம்: பிரபல நடிகர்!
தமிழ் சினிமா தரம் குறைந்ததற்கு விஜய் அஜித் தான் காரணம் என பிரபல நடிகர் ஒருவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளர் அருண்பாண்டியன், அஜித் விஜய் படம் குறித்து தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறிய போது விஜய் அஜித் ஆகியோர் பெரும் தொகையை சம்பளமாக பெறுகின்றனர் என்றும் அதனால் படத்தின் தரம் குறைகிறது என்றும் கூறினார்
 
விஜய் அஜித் படங்களில் பட்ஜெட்டில் 90% அவர்களுடைய சம்பளத்திற்கு போய் விடுகிறது என்றும் மீதி பணத்தை வைத்து தான் படம் எடுக்கப்பட்டுள்ளது என்றும் இதனால் தான் படம் தரமற்றதாக உருவாகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களால் தான் தமிழ் சினிமா பின்தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்றும் நடிகர் அருண்பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார் அவருடைய இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்