அனைவருக்கும் கல்வி திட்டம்.. ஜூன் மாத நிதியை மத்திய அரசு வழங்கவில்லை: அமைச்சர் அன்பில் மகேஷ்

Mahendran
சனி, 31 ஆகஸ்ட் 2024 (11:43 IST)
அனைவருக்கும் கல்வி திட்டத்திற்கான ஜூன் மாத நிதியை மத்திய அரசு இன்னும் வழங்கவில்லை என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் குற்றஞ்சாட்டி உள்ளார்.

பள்ளிக்கல்வித்துறையில் கடந்த ஆண்டுக்கான கல்வி திட்டத்திற்கான பணம் வந்தாலும் அதில் 230 கோடியை குறைத்து விட்டார்கள் என்றும் 2021 கோடி ரூபாய் நாம் கேட்டிருந்த நிலையில் 1876 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதனால் லட்சக்கணக்கான மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது என்றும் 15000 ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க முடியவில்லை என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் ஒரு திட்டத்திற்கான நிதி ஒதுக்கி விட்டால் அதன் பிறகு அதனை வழங்குவதற்கு நிபந்தனை விதிக்க கூடாது என்றும் தமிழக அரசு அடுத்த கட்ட முடிவுகள் குறித்து முதலமைச்சர் இடம் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

 அனைவருக்கும் கல்வி திட்டத்திற்கான ஜூன் மாத நிதியை மத்திய அரசு இன்னும் வழங்காததால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் குற்றம் சாட்டி உள்ளார்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்