சூப்பர்ஹிட் டிமாண்டி காலணி 2 படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி இதுவா?

vinoth

வியாழன், 29 ஆகஸ்ட் 2024 (13:54 IST)
டிமாண்டி காலணி என்ற படத்தின் தனது முத்திரையைப் பதித்த இயக்குனர் அஜய் ஞானமுத்து, அடுத்து இயக்கிய படங்களான இமைக்கா நொடிகள் மற்றும் கோப்ரா ஆகிய இரண்டும் ரசிகர்களை பெரியளவில் கவரவில்லை. இந்நிலையில் தன்னுடைய ஹிட் படத்தின் இரண்டாம் பாகமாக ‘டிமாண்டி காலனி 2’ படத்தை இயக்கியுள்ளார்.

ஆகஸ்ட் 15 ஆம் தேதி தங்கலான் படத்துடன் ரிலீஸான இந்த படம் எதிர்பார்த்ததை விட வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது. முதல் நாளில் தங்கலான் கொஞ்சம் கலவையான விமர்சனங்கள் கிடைக்க ஆரம்பித்ததால் டிமாண்டி காலணி பக்கம் ரசிகர்கள் சாய ஆரம்பித்தனர். இந்த படம் எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய அளவில் வசூல் செய்து வரும் நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் 50 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்யும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சூப்பர் ஹிட்டாகியுள்ள டிமாண்டி காலணி 2 படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. செப்டம்பர் மத்தியில் இந்த படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்