அரசுத் திட்டங்களில் முதல்வர்களின் பெயர்களையும், படங்களையும் பயன்படுத்த கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடையை எதிர்த்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அரசு திட்டங்களில் தலைவர்களின் பெயர்களையும், புகைப்படங்களையும் பயன்படுத்தலாம் என்று உத்தரவிட்டதோடு, நீதிமன்ற நேரத்தை வீணடித்த முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியது.
சி.வி. சண்முகம் தொடர்ந்த இந்த வழக்கில், ஒரு குறிப்பிட்ட கட்சியை மட்டும் குறிவைத்துத் தாக்கி உள்நோக்கத்துடன் தொடரப்பட்டதாக நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்."அரசியல் சண்டைகள் களத்தில்தான் இருக்க வேண்டுமே தவிர, நீதிமன்றத்தில் இருக்கக் கூடாது" என்று நீதிபதிகள் கடுமையாக எச்சரித்தனர்.