மனநலம் பாதிக்கப்பட்ட 65-வயது மூதாட்டிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவர் கைது!

J.Durai
வியாழன், 24 அக்டோபர் 2024 (09:17 IST)
திருப்பூர் மாவட்டம் 
தாராபுரம் அருகே உள்ள சின்னக்காம் பாளையம் பகுதியை சேர்ந்த மனநிலை பாதிக்கப்பட்ட மூதாட்டி செல்லம்மாள் வயது 65 இவரது கணவர் கடந்த 
40-வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டதாகவும், இவருக்கு மகன்கள் சிவராஜ் மற்றும் முருகேசன் இரண்டு மகன்கள் உள்ளனர். 
 
இவரது மூத்த மகன் சிவராஜ் ஏற்கனவே இறந்துவிட்டார். இந்நிலையில் செல்லம்மாள் என்பவர் வீட்டில் இல்லாமல் இருந்ததை அறிந்த இவரது மகன் முருகேசன் அக்கம் பக்கத்தில் தேடிப் பார்த்துள்ளார். 
 
அப்போது செல்லமுத்து என்பவரது வீட்டில் இருந்தது தெரிய வந்தது. அங்கு சென்று பார்த்தபோது செல்லம்மாள் பாலியல் ரீதியாக துன்புறுத்தியது தெரிய வந்தது.
 
மேலும் செல்லமுத்துவை பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
 
செல்லம்மாள் என்பவரது மகன் முருகேசன் அளித்த புகாரின் பேரில் அலங்கியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
 
இந்த விசாரணையில் செல்லம்மாள் என்ற மனநிலை பாதிக்கப்பட்ட மூதாட்டியை பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்ய வந்ததையடுத்து செல்லமுத்துவை அலங்கியம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
 
65-வயது மூதாட்டியை 56-வயது செல்லமுத்து பாலியல் ரீதியாக துன்புறுத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்