திமுகவினர் இரு தரப்பினர் பட்டாசு வெடிப்பதில் ஒருவருக்கொருவர் மோதல் பரபரப்பு!

J.Durai

திங்கள், 30 செப்டம்பர் 2024 (11:14 IST)
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆக பொறுப்பேற்றதை கொண்டாடுவதற்காக திமுகவினர் அண்ணா சிலை அருகே  ஞாயிற்றுக்கிழமை மாலை ஒன்று கூடினர். அப்போது திமுக நகர அவைத் தலைவர் கதிரவன் தலைமையில் பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்புகள் கொடுத்து ஊர்வலமாக சென்றனர்.
 
அதே நேரத்தில் முன்னாள் நகர செயலாளரும் தற்போதைய மாநில செயற்குழு உறுப்பினருமான கே. எஸ்.தனசேகர் ஆதரவாளர்கள் 50,பேர் பட்டாசு வெடிக்க அதே பகுதிக்கு வந்தனர்.
 
அப்போது அவை தலைவர் கதிரவன், உங்களை எல்லாம் யார் பட்டாசு வெடிக்கச் சொன்னாங்க நீங்க பட்டாசு வெடிக்க கூடாது என நகர துணைச் செயலாளர் கமலக்கண்ணனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
 
அதனால் ஆத்திரமடைந்த நகர துணை செயலாளர் கமலக்கண்ணன் நகர அவை தலைவர் கதிரவன், இருவரும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
 
அதில் திமுக தொண்டர் ராமதாஸ் என்பவர் நாங்கள் ஏன் எங்கள் தலைவர் துணை முதலமைச்சர் பொறுப்பேற்றதற்கு பட்டாசு வெடிக்க கூடாது எங்களை கூப்பிட்டு நீங்கள் பட்டாசு வெடித்திருக்கலாம்?
 
அதுவும் செய்யவில்லை ஓட்டு போடணும் திமுகவிற்கு வேலை செய்யணும் எல்லாம் பிரச்சாரத்திலும் ஈடுபடனும் ஆனால் நாங்கள் மட்டும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு பட்டாசு வெடிக்க கூடாதா? என சத்தமிட்டார்.
 
இதனால் திமுகவில் இரு பிரிவினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது அதனை தொடர்ந்து திமுக நகர அவைத் தலைவர் கதிரவன் அண்ணா சிலை மற்றும் பூக்கடைக்காரனார் பகுதியில் பட்டாசு வெடித்தனர். நகர துணைச் செயலாளர் கமலக்கண்ணன் பேருந்து நிலையம் சென்று அங்கு பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
 
தாராபுரத்தில் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்றதை கொண்டாடுவதற்கு திமுகவில் இரு அணிகளாக பிரிந்து சண்டையிட்டுக் கொண்ட காட்சி பொதுமக்களை வெகுவாக முகம் சுளிக்க வைத்தது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்