விசாரணை கைதியின் பற்களை பிடுங்கிய அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி சஸ்பெண்ட்..!

Webdunia
புதன், 29 மார்ச் 2023 (14:00 IST)
விசாரணை கைதியின் பற்களை பிடுங்கி விரும்பத் தகாத சம்பவத்தில் ஈடுபட்ட அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல்வீர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. சமீபத்தில் அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல்பீர் சிங் அவர்கள் விசாரணை கைதியின் பற்களை பிடுங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலான நிலையில் அதிமுக பாமக உள்ளிட்ட கட்சிகள் இது குறித்து இன்று சட்டமன்றத்தில் கவனம் இருப்பு தீர்மானம் கொண்டு வந்தது.
 
இந்த கவனத்திற்கு தீர்மானத்திற்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் பதில் அளித்த போது விசாரணை கைதிகளின் பற்களை படுங்கி விரும்பத்தகாத சம்பவத்தில் ஈடுபட்ட அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல்வீர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் என்று தெரிவித்தார்.
 
மேலும் இதுகுறித்து விசாரணை நடந்து வருவதாகவும், முழுமையான விசாரணை அறிக்கை வந்தவுடன் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்