குற்றவாளிகளின் பற்களை பிடுங்கியதாக புகார்: உதவி காவல் கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை..!

திங்கள், 27 மார்ச் 2023 (15:50 IST)
குற்றவாளிகளின் பற்களை பிடுங்கியதாக புகார்: உதவி காவல் கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை..!
குற்றங்களில் ஈடுபடும் நபர்களின் பற்களை புடுங்கியதாக புகார் வந்துள்ளதை அடுத்து நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் உதவி காவல் கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
ஏற்கனவே குற்றவாளிகளின் கை கால்கள் உடைக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது என்பது தெரிந்ததே. குற்றவாளிகள் பிடிக்கப்பட்ட மறுநாளே கைகளில் கட்டுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது. 
 
இந்த நிலையில் குற்றங்களில் ஈடுபடும் நபர்களின் பற்களைப் புடுங்கியதாக நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் உதவி காவல் கண்காணிப்பாளர் மீது புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் உதவி காவல் கண்காணிப்பாளர் பல்பீர்சிங் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. 
 
மேலும் இந்த விவகாரத்தில் உதவி ஆட்சியர் தலைமையில் விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்