குழந்தையின் தலையில் மாட்டிய அலுமினியப் பானை!

Webdunia
சனி, 20 ஆகஸ்ட் 2022 (16:08 IST)
ராமநாதபுரம் மாவட்ட பரமக்குடியில் ஒரு குழந்தையின் தலையில் அலுமினியப் பானை மாட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக் குடி அருகே கிளாக்குளம் என்ற  பகுதியில் வசித்து வருபவர் பழனிசாமி. இவரது ஒன்றரை வயது மகன் அஜித் விளையாடிக் கொண்டிருந்தபோது, வீட்டில் இருந்த அலுமிய சமையம் பாத்திரத்திற்குள் அவரது தலை சிக்கியுள்ளது.

இந்தப் பாத்திரத்தில் உள்ள வாய்ப்பகுதி  குறுகியதாக இருந்ததால் குழந்தையின் தலையை வெளியே எடுக்கவில்லை என்பதால் பெற்றோர் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தனர்.

பின்னர், பரமக்குடி தியணைப்பு நிலையத்திற்கு குழந்தை தூக்கிச் சென்றனர்,  பின்னர், பல மணி போராட்டத்திற்குப் பின்  பாத்திரத்தை வெட்டி அகற்றி, குழந்தையை மீட்டனர்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்