மக்களுக்கு இடையூறாக உள்ள அனைத்து மதுக்கடைகளும் அகற்றப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ்

Webdunia
சனி, 20 ஆகஸ்ட் 2022 (11:52 IST)
மக்களுக்கு இடையூறாக இருக்கும் அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என தமிழக கல்வித்துறை அமைச்சர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிக்கூடங்கள் அருகில் உள்ள மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர் 
 
இந்த வேண்டுகோளை பரிசீலித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிக்கூடங்களின் அருகாமையில் உள்ள மதுக்கடைகளை அகற்றும் பணி துவங்கப்பட்டு உள்ளதாகவும் விரைவில் முழுமையாக அகற்றப்படும் என்று தெரிவித்துள்ளார்
 
மேலும் மக்களுக்கு இடையூறாக உள்ள அனைத்து மதுக்கடைகளையும் அகற்ற வேண்டும் என்பதே தமிழக அரசு முடிவு என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்