ஒவ்வொரு ஆண்டும் அட்சய திருதியை அன்று நகைகள் வாங்கினால் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை இருந்து வரும் நிலையில், இன்று அதாவது ஏப்ரல் 30ஆம் தேதி அட்சய திருதியை முன்னிட்டு, அதிகாலையிலேயே சென்னையில் உள்ள நகைக்கடைகள் திறக்கப்பட்டன.
பல்வேறு சலுகைகளை கடைக்காரர்கள் அறிவித்துள்ள நிலையில், அதிகாலையிலேயே நகைகள் வாங்கவும் பலர் வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ள நிலையில், ஒரு கிராம் ₹9,000-க்கும் அதிகமாக இருந்தாலும், அட்சய திருதியை தினத்திற்காக நகைகள் வாங்க பொதுமக்கள் குவிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இன்று புதன்கிழமை என்பதால் அட்சய திருதியை புதன்கிழமை என்பதாலேயே கூடுதல் விசேஷம் என்றும் கூறப்படுகிறது. அட்சய திருதியை நாளை ஒட்டி பல நகைக்கடைக்காரர்கள் சலுகை விலகிய அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.