நடிகை டாப்சிக்கு அஜித் சொன்ன அறிவுரை!

Webdunia
ஞாயிறு, 4 செப்டம்பர் 2016 (13:16 IST)
‘ஆடுகளம்’ திரைப்படம் மூலம் தமிழி சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை டாப்சி.


 


இவர் அஜித்தின் ‘ஆரம்பம்’ படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அப்போது, நடிகர் அஜித் இவருக்கு சொன்ன அறிவுரையை தான் இப்போதும் கடை பிடிப்பதாக டாப்சி கூறியுள்ளார்.

இதுகுறித்து டாப்சி கூறியதாவது, “நம்மைப்பற்றி வரும் நல்ல கருத்துக்களை விட்டுவிடு, நமக்கு எதிராக வரும் விமர்சனங்களை மனதில் கொள்ள வேண்டும். அதை வைத்து தான், நமது தவறுகளை நாம் திருத்திக்கொள்ள முடியும், என்று அஜித் என்னிடம் கூறி இருக்கிறார். அவர் சொன்ன இந்த அறிவுரையைத் தான் நான் இன்றும் பின்பற்றுக்கிறேன். என்றார்.

தற்போது அவர், இந்தி, தெலுங்கு பட உலகில் மிக முக்கிய இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்