ஜெ.விற்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் அளிக்கும் சிகிச்சைகள் : பரபரப்பு தகவல்

Webdunia
வியாழன், 6 அக்டோபர் 2016 (16:18 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு தற்போது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில், அவர்களின் பின்னணி, அளிக்கப்படும் சிகிச்சையின் விபரங்கள் ஆகியவை தற்போது வெளியாகியுள்ளது.


 

 
முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22ம் தேதி, உடல்நலக்குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு, 14வது நாட்களாக அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
முதல்வர் அங்கு அனுமதிக்கப்பட்டபோது, காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்பட்டது.  அதனால் அப்பல்லோ மருத்துவர்களே அவருக்கு சிகிச்சை அளித்தனர். அதன்பின், முதல்வர் நீர்த்தொற்று காரணமாக மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாக கூறப்பட்டது. 
 
எனவே ஆனால், மும்பை மற்றும் லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் குழு அப்பல்லோவிற்கு வந்தது. அதன்பின் ரிச்சர்ட் சென்றுவிட்டார். ஆனால் அவரின் மருத்துவக் குழு மீண்டும் சென்னை வந்து, முதல்வருக்கு சிகிச்சை அளித்து வருவதாக கூறப்பட்டது.
 
இந்நிலையில், தற்போது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்து நுரையீரல் சிகிச்சை நிபுணர் கில்னானி, மயக்கவியல் தீவிர சிகிச்சை நிபுணர் மற்றும் பேராசிரியர் அஞ்சன் டிரிக்கா, இதய சிகிச்சை நிபுணர் நிதிஷ்நாயக் ஆகியோர் அப்பல்லோவிற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். எனவே அது தொடர்பான உடல்நிலை பாதிப்பு முதல்வருக்கு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இவர்கள் மூவரும்தான் தற்போது முதல்வருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். 
 
இந்நிலையில், முதல்வர் விரைவில் குணமடைய வேண்டி, மருத்துவமனைக்கு வெளியே, அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் மகளி அணியினர் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்