சிறையில் ஒருமாதம் முடிந்தது; யாரும் பார்க்க வரவில்லை; விரத்தியில் சசிகலா

Webdunia
வெள்ளி, 17 மார்ச் 2017 (15:25 IST)
பெங்களூர் சிறையில் சசிகலா அடைக்கப்பட்டு ஒருமாதம் முடிவடைந்துள்ள நிலையில் அவரை யாரும் சந்திக்கவில்லை என அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.


 

 
சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளியாக கைது செய்யப்பட்டு கடந்த மாதம் 15ஆம் தேதி சசிகலா பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். நேற்று முன் தினத்தோடு ஒருமாதம் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது. சசிகலாவை சிறையில் அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், காமராஜ் என பலர் சென்று கடந்த மாதம் நேரில் சந்தித்தனர். இவர்களை தொடர்ந்து வளர்மதி, கோகுல இந்திரா, சி.ஆர்.சரஸ்வதி ஆகியோரும் சந்தித்து வந்தனர். 
 
அதிமுக துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் கடந்த மாதத்தில் மட்டும் சசிகலாவை இரண்டு முறை சந்தித்து பேசியுள்ளார். முதல்வர் இதுவரை சசிகலாவை சிறையில் சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவர் சிறைக்கு சென்று ஒருமாதம் முடிவடைந்து விட்டது. 
 
இந்நிலையில் கடந்த சில நாட்களாக யாரும் சசிகலாவை சிறையில் சென்று சந்திக்கவில்லை. இதன் காரணமாக தற்போது அதிருப்தியில் இருந்து வருகிறார் என்று கூறப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்