தமிழகத்தில் இரண்டாவது 8 வழிச்சாலை: அமைச்சர் ஆர்.பி.,உதயகுமார் அறிவிப்பு

Webdunia
புதன், 27 ஜூன் 2018 (08:01 IST)
சென்னை-சேலம் பசுமை  8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த திட்டத்தை எதிர்க்கும் பலர் கைது செய்யப்பட்டும் வருகின்றனர்.
 
இந்த நிலையில் தமிழகத்தில் மேலும் ஒரு 8 வழிச்சாலை அமைக்க திட்டம் உள்ளதாக நேற்று சட்டமன்றத்தில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார். சென்னை-சேலம் 8 வழிச்சாலையை அடுத்து மதுரை - தஞ்சாவூர் இடையே 8 வழிச்சாலை திட்டம் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும், படிப்படியாக இந்த திட்டம் நிறைவேற்றப்படும்' என்றும் கூறினார். அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு மதுரை, தஞ்சை மக்களிடையே என்னவிதமான ரியாக்சன் ஏற்படும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
மேலும் திண்டுக்கல் - பொள்ளாச்சி இடையே 6 வழி சாலை திட்டத்திற்கு நிலம் எடுப்பு பணி முடிந்துவிட்டதாகவும், அங்கு சாலை அமைக்கப்படும் பணி விரைவில் தொடங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார். 
 
அதேபோல் சாலை அமைக்க நிலம் கொடுப்பவர்களுக்கு புதிய நில எடுப்பு சட்டத்தின்படி இழப்பீடு வழங்கப்படும் என்றும் ரோடு போடுவதற்காக இடம் கொடுத்த மக்களை அரசு ரோட்டில் விடாது என்றும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்