அண்ணாமலையை அடுத்து டெல்லி செல்லும் தமிழிசை செளந்திரராஜன்.. மத்திய அமைச்சர் பதவியா?

Mahendran
சனி, 8 ஜூன் 2024 (08:07 IST)
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தமிழகத்தில் படு தோல்வி அடைந்தாலும் மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்க இருக்கும் நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் டெல்லி சென்றார் என்றும் அவர் ஜேபி நட்டா மற்றும் அமித்ஷா ஆகியவர்களை சந்தித்ததாகவும் தகவல் வழியாக என.

மேலும் மத்திய அமைச்சரவை பட்டியலில் அண்ணாமலை பெயர் இருப்பதாகவும் ஆனால் அண்ணாமலை தனக்கு தமிழக அரசியல் செய்யவே விருப்பம் என்று கூறியதாகவும் செய்திகள் கசிந்திருக்கும் நிலையில் அண்ணாமலை மத்திய அமைச்சர் ஆவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்த நிலையில் இன்று திடீரென தமிழிசை சௌந்தர்ராஜன் டெல்லி செல்லும் நிலையில் அவருக்கும் மத்திய அமைச்சர் பதவி கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லி செல்லும் முன் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கட்சியின் சாமானிய தொண்டராகவே நான் டெல்லி செல்கிறேன், கூட்டணி பற்றிய பேச்சு வேறு மாதிரி சென்று கொண்டிருக்கிறது. பாஜக அதிகமாக வாக்கு சதவீதம் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. "ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த தேர்தலுக்கு வியூகம் வகுக்கப்படும். பாஜகவை விமர்சனம் செய்ய செல்வப்பெருந்தகைக்கு எந்த தார்மீக உரிமையும் கிடையாது என்று கூறினார்,

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்