கனிமொழி vs உதயநிதி: முட்டி விட்டு வேடிக்கை பார்க்கும் ஸ்டாலின்??

Webdunia
வியாழன், 13 ஆகஸ்ட் 2020 (13:15 IST)
கனிமொழிக்கு போட்டியாக உதயநிதி ஸ்டாலினை, ஸ்டாலின் வளர்த்து வருவதாக அதிமுக அமைச்சர் தகவல். 
 
திமுக தலைவர் ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு கடந்த ஆண்டி திடீரென இளைஞர் அணி செயளாலர் பதவி வழங்கப்பட்டது. அப்போது அவர் மீது பல விமர்சனங்கள் எழுந்தாலும், அவை அனைத்தையும் முறியடித்து கட்சி தேவையானதை செம்மையாக செய்து வருகிறார்.  
 
கொரோனா காலத்தில் பட ஷூட்டிங்கும் இல்லததால் உதயநிதியின் ஃபோகஸ் மொத்தமும் திமுக மீதே உள்ளது. அதுவும் இன்னும் ஒரு சில மாதங்களில் தேர்தல் வரவுள்ளதால் இப்போதே முக்கிய முடிவுகளை எடுக்க துவங்கிவிட்டார் உதயநிதி. ஆம், சமீப காலமாக திமுகவில் முக்கிய முடிவுகளில் உதயநிதியிடமும் கலந்து ஆலோசிப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.  
சில சமயங்களில் உதயநிதி தன்னிச்சையாக எடுக்கும் முடிவுகளையும் ஸ்டாலின் ஆதரப்பதாகவே தெரிகிறது. இதனால் கட்சியில் உள்ள சீனியர்களின் கை கட்டிப்போடப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இந்நிலையில் அமைச்சர் செல்லூர் ராஜூ சமீபத்தில், ஸ்டாலின் திறமையில்லா தலைவர். உதயநிதி ஸ்டாலின் கட்சிக்குள் வளர்ந்து வருகிறார் என கூறினார். 
 
இதனைத்தொடர்ந்து இப்போது கடம்பூர் ராஜு, திமுக தலைவர் ஸ்டாலின் கனிமொழியை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை. ஆகையால் கனிமொழிக்கு போட்டியாக உதயநிதி ஸ்டாலினை, முக ஸ்டாலின் முன்நிறுத்தி வருகிறார் என பகீர் கிளப்பு உள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்